போரின் உண்மை நிலைமை இதுவே... யாரையும் நம்ப தயாராக இல்லை: ஜெலென்ஸ்கி அறிவிப்பு!
உக்ரைன் எந்தவொரு அழகான வாக்குறுதிகளையும் நம்ப தயாராக இல்லை என அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 5 வாரங்களை கடந்து இருக்கும் நிலையில், கடந்த 30 திகதி நான்காம் கட்ட பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்று முடிவடைந்து உள்ளது.
இதில் ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையை உக்ரைன் ஏற்றுக்கொண்டதை அடுத்து, தலைநகர் கீவ் மற்றும் உக்ரைனின் முக்கிய நகரங்களில் இருந்து படைகளை குறைப்பதாக ரஷ்யாவும் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இன்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் வாய் வார்த்தையாக மட்டும் கட்டமைக்கப்படும் எந்தவொரு அழகான வாக்குறுதிகளையும் நம்ப தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் யாரையும் நம்பவில்லை, இதுவே போர்க்களத்தின் உண்மையான நிலைமை மற்றும் இதுவே முக்கியமானதும் கூட என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த போரில் நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்கப்போவது இல்லை, எங்கள் நாட்டின் ஒவ்வொரு அங்குல இடத்தையும் நாங்கள் பாதுகாக்க போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்ததாவது, உக்ரைனின் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், நாங்கள் ரஷ்யாவின் அடுத்தகட்ட தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
கீவ் மற்றும் செர்னிகிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் திரும்பபெறவில்லை மாறாக உக்ரைனிய ராணுவ படைகளின் தடுப்பு தாக்குதலால் பின்னகர்த்த பட்டு இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போர் நேரத்தில் இப்படியா? புடின் காதலியின் 19 வயது மகள் தொடர்பிலான ரகசியம் வெளியானது