ஒரே இரவில் 623 ட்ரோன், ஏவுகணைகளை ஏவிய ரஷ்யா! அவற்றில் 319ஐ சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா ஒரே இரவில் 623 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
விரைவான முடிவுகள் தேவை
2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது.
இந்த போரை நிறுத்த சமிக்ஞைகளை விட அதிகமாக அனுப்புமாறு, தனது மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
அப்போது அவர், "ரஷ்யாவின் வேகம் வான்வழித் தாக்குதல்களுக்கு விரைவான முடிவுகள் தேவை; மேலும் பொருளாதாரத் தடைகள் மூலம் அதை இப்போதே கட்டுப்படுத்த முடியும்.
ரஷ்யா ட்ரோன்களை உற்பத்தி செய்து எண்ணெயில் இருந்து லாபம் ஈட்ட உதவுபவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
623 ட்ரோன்கள், ஏவுகணைகள்
இந்த நிலையில் ரஷ்யா ஒரே இரவில் 623 ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் 319 ஷாஹெட் ட்ரோன்கள் மற்றும் 25 ஏவுகணைகளை தங்கள் விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு ஏவுகணை மற்றும் சுமார் 20 ட்ரோன்கள் ஐந்து இடங்களைத் தாக்கின என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "ரஷ்யா ஒரே இரவில் 597 ட்ரோன்கள் மற்றும் 26 நீண்ட தூர ஏவுகணைகளை வீசியது.
அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஷாஹெட்கள். அவை ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் ஆகும்" என சனிக்கிழமை தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |