உள்நாட்டில் தயாரிக்கப்படும் உக்ரைன் ட்ரோன்கள்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா மோதல்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த போர் காலகட்டத்தில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் எதிர்ப்பு தாக்குதல் நடத்தி வந்த உக்ரைன், கடந்த சில காலமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அதே நேரம் நேற்று வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் இன்னும் அதிக அளவில் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
இந்நிலையில் இன்று ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தின் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது கிட்டத்தட்ட 17 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டதாகும்.
உக்ரைன் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் 6 பேர் வரை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடை மறிக்கப்பட்ட ட்ரோன் பாகங்களில் விழுந்ததில் அடையாளம் காணப்படாத தொழிற்சாலை இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |