ரஷ்யாவில் ட்ரோன் விமான தயாரிப்பு ஆலையை குறிவைத்து தாக்குதல்
ரஷ்யாவின் பல பிராந்தியங்களில் உள்கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற இடங்களைக் குறிவைத்து, உக்ரைன் இரவுநேர தாக்குதல் நடத்தியுள்ளது.
இரவு நேர வான்வழித் தாக்குதல்
உக்ரைன் நடத்திய தொடர் இரவு நேர வான்வழித் தாக்குதல்களில் ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலைகள் சேதமடைந்தன.
பல பிராந்தியங்களில் உள்ள உள்கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற இடங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Chuvashia குடியரசில் செபோக்சரி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் "பல உள்கட்டமைப்பு வசதிகள்" சேதமடைந்ததாகவும், குறைந்தது மூவர் காயமடைந்தனர் என்று ஆளுநர் ஒலெக் நிகோலாயேவ் கூறினார்.
அதேபோல், VNIIR Progress ஆலையை குறிவைத்து உக்ரைன் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த ரஷ்ய ட்ரோன் விமானங்கள் மற்றும் குண்டுகளுக்கான பாகங்களைத் தயாரிப்பதாக உக்ரைன் கூறி வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |