உக்ரைனின் 1015 ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
Ukraine drone strike on russia's st petersburg: ரஷ்ய நகரம் ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாக, ஐந்து பேர் காயமடைந்தனர்.
ரஷ்ய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியானார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் முக்கிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
எண்ணெய் முனையம், ஒரு எண்ணெய் கிடங்கு மற்றும் தொழில்துறை கிடங்குகளில் இந்த தாக்குதலால் தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக ஆளுநர் அலெக்ஸாண்டர் பெக்லோவ் தெரிவித்தார்.
1,015 உக்ரைன் ட்ரோன்கள்
மேலும் அதில் ஒருவர் பலியானதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
அதே சமயம் ரஷ்ய மின் வணிக நிறுவனமான ஓசோன், தங்களது தளவாட மையம் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமானது நாட்டின் பகுதிகளில் பறந்த 1,015 உக்ரைன் ட்ரோன் விமானங்களை தங்களது வான் பாதுகாப்புப் பிரிவுகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
