ரஷ்யாவின் ரயில் பாதைகள் மீதும் தாக்குதலை ஆரம்பித்த உக்ரைன்
Ukraine drones starts attack on russian railway tracks: உக்ரைனின் ட்ரோன் விமானங்கள் ரஷ்யாவில் ரயில் பாதைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
ரஷ்யாவில் உள்ள ரயில் பாதைகள் மீது உக்ரைன் ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
உக்ரேனிய ட்ரோன் விமானங்கள்
உக்ரைனில் முழு அளவிலான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய பிரதேசத்தில் பல ரயில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில், ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரயில் உள்கட்டமைப்பை, உக்ரேனிய ட்ரோன் விமானங்கள் தாக்கியுள்ளது.
இதனை தெரிவித்த அப்பிராந்தியத்தின் தற்காலிகத் தலைவர் Yegor Kovalchuk, தியாட்கோவோ-லியுடினோவோ பிரிவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரு ரயில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் 10 ரயில் பெட்டிகள் தடம் மாறின.
18 காலி சரக்கு ரயில் பெட்டிகள்
உனேச்சா மாவட்டத்தில் ரயில் பாதை தாக்கப்பட்டதால் 18 காலி சரக்கு ரயில் பெட்டிகள் தடம் மாறின.
அதேபோல், நவ்லின்ஸ்கி மாவட்டத்தில் ட்ரோன் விமானம் ஒன்று தண்டவாளத்தை சேதப்படுத்தியது. இந்த மூன்று சம்பவங்களிலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார்.
இதற்கு முன்பாக உக்ரேனிய இராணுவம் ரஷ்ய ரயில் பாதைகளை ட்ரோன் விமானங்கள் குறிவைக்காத நிலையில், தற்போது முதல் தாக்குதலை உக்ரைன் தொடங்கியுள்ளது.