ரஷ்யாவிற்கு புகுந்த 71 உக்ரைனிய ட்ரோன்கள்: செவஸ்டோபோல் நகரை குறிவைத்து தாக்குதல்
ரஷ்யாவின் செவஸ்டோபோல்(Sevastopol) நகர் மீது உக்ரைன் தீவிரமான வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள செவஸ்டோபோல் நகரம் மீது உக்ரைன் வான் பாதுகாப்பு படையினர் மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
கிரிமியா தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்த செவஸ்டோபோல் நகரம், போர் தொடங்கியதில் இருந்து அதிகமான வான்வழி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நகரமாக உள்ளது என்று அப்பகுதி அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

இரவு முழுவதும் நடந்த வான்வழித் தாக்குதலில் கிட்டத்தட்ட 71 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக உள்ளூர் அரசின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நடத்திய இந்த வான்வழி ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் 4 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
உக்ரைன் இந்த ட்ரோன் தாக்குதல், கிரிமியாவின் செவஸ்டோபோல் நகரை மட்டும் குறி வைக்காமல், ரஷ்யாவின் பிற பகுதிகளையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் இந்த திடீர் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து ரஷ்ய வான் பாதுகாப்பு படை தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |