புடின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மீது டிரம்ப் கடும் கோபம்
ரஷ்ய ஜனாதிபதி புடின் வீட்டின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
புடின் வீட்டின் மீது தாக்குதல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வீடு மீது உக்ரைனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தொலைபேசியில் உரையாடினார்.
ஆனால் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உக்ரைன் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் அதிருப்தி
இது தொடர்பாக டிரம்ப் தெரிவித்துள்ள தகவலில், புடின் என்னுடன் தொலைபேசியில் பேசினார், அப்போது அவரது வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடந்து இருப்பதாக தெரிவித்தார், இதனால் நான் மிகவும் கோபமடைந்துள்ளேன்.
ஒரு நாட்டு தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவது சரியானது இல்லை, மேலும் இது போன்ற தாக்குதல் நடவடிக்கைக்கும் இது சரியான நேரம் இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் தாக்குதல் நடந்து இருக்கவும் வாய்ப்புகள் மிக குறைவு, எனவே தாக்குதல் நடந்ததா என்பதை கண்டுபிடிப்போம்.
உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு சில சிக்கல்கள் இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |