ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை சிதைத்த உக்ரைன் ட்ரோன்கள்: ரஷ்யா கொடுத்த பதிலடி
ரஷ்யாவின் வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்பை உக்ரைன் அழித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேதப்படுத்திய உக்ரைன்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீராத மோதலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவின் வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்பை உக்ரை சேதப்படுத்தி அழித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைனிய ஊடக முகமை வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதிக்கு அருகில் இருந்த எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு அமைப்பை உக்ரைனிய ட்ரோன்கள் சேதப்படுத்தி அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
AP
இந்த தாக்குதல் இரவு நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்கோரோட் பகுதியில் அதிகாலை கேட்ட வெடி சத்தத்தை ரஷ்ய டெலிகிராம் சேனல்கள் வெளியிட்ட வீடியோக்களில் கேட்க முடிகிறது.
104-old-us-lady-skydives-from-13-500-ft-guinness-1696442131இந்த தாக்குதல் குறித்து பேசிய உக்ரைனிய பாதுகாப்பு சேவை வட்டாரங்கள், உக்ரைனிய ட்ரோன் தாக்குதலின் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விரிவாக கூறவில்லை.
SKYNEWS
சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள்
இதற்கு முன்னதாக ரஷ்யாவின் பெல்கோரோட், பிரையன்ஸ்க் மற்றும் குர்ஸ்க், ஆகிய பகுதிகள் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31 உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |