Starshield இணைப்பை இழந்து கீழே விழுந்த உக்ரைன் ட்ரோன்கள் - அமெரிக்கா உடனான உறவில் பதற்றம்
Ukraine Drones Down After Starshield Disruption: ஸ்டார்ஷீல்ட் இணைப்பு பாதிக்கப்பட்டதால் 1 மில்லியன் லொலர் மதிப்புள்ள ட்ரோன்களை உக்ரேன் இழந்துள்ளது.
இணைப்பை இழந்து கீழே விழுந்த உக்ரைன் ட்ரோன்கள்
உக்ரைன் படைகள் ரஷ்ய இராணுவ இலக்குகளை தாக்க அனுப்பிய ட்ரோன்கள், திடீரென வீடியோ இணைப்பை இழந்து வானத்திலிருந்து கீழே விழுந்தன.

ஸ்டார்ஷீல்ட் எனப்படும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் நிதியுதவியுடன் இயங்கும் செயற்கைக்கோள் இணைய சேவையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், இந்த சம்பவம் நடந்ததாக உக்ரைன் தளபதி ஒலெக் தெரிவித்தார்.
இந்த தடையால், உக்ரைன் படைகள் மூன்று நாட்கள் முக்கியமான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ரஷ்ய கட்டளை மையங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களை தாக்கும் திட்டங்கள் தடைபட்டன. இதனால், உக்ரைன் படைகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் 40 மைல் வேகத்தில் கூட இணைப்பை இழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக 250 மைல் வேகத்தில் கூட சீராக இயங்கிய ட்ரோன்கள், தற்போது 100 மைல் வேகத்தைத் தாண்டினால் இணைப்பு துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது உக்ரைனின் விமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த மாற்றம் திட்டமிட்ட நடவடிக்கை எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அமெரிக்க அதிகாரிகள், சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், அமெரிக்க வெளிவிவகாரத்துறைசெயலாளர் மார்கோ ரூபியோ, “ஒருவிதத்தில் சில சேவை குறைபாடுகள் ஏற்பட்டது, ஆனால் மீண்டும் சரிசெய்யப்பட்டது” என்று ஒப்புக்கொண்டார்.
உக்ரைன் படைத்தளபதி யூரி புத்துசோவ், “இந்த தடையால் ரஷ்ய படைகளுக்கு ஓய்வு நாள் கிடைத்தது. ரஷ்யாவின் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம், உக்ரைன்-அமெரிக்க உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. உக்ரைன், அமெரிக்காவின் ஆதரவு குறைவதாகக் குற்றம் சாட்ட, அமெரிக்கா அதை மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |