ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்: உக்ரைன் நடத்திய ட்ரோன் வேட்டை
Ukraine Drones Hits Russian Oil Facility in Perm: ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்ய எண்ணெய் ஆலை மீது தாக்குதல்
இன்று அதிகாலை ரஷ்யாவின் பெர்ம் நகரில் அமைந்துள்ள முக்கிய தொழிற்சாலையில் மையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இணையத்தில் பரவிய வீடியோவில், அப்பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ பற்றி எரிவது பதிவாகியுள்ளது.
BREAKING: New images show at least 5 massive, separate fires burning across Russia's Perm oil refinery, one of the largest in the country, after this morning's Ukrainian drone strike. pic.twitter.com/3tvIzLyRt8
— The Hormuz Letter (@HormuzLetter) September 25, 2026
பெர்ம் நகர ஆளுநர் டிமிட்ரி மாகோனின், உக்ரைனின் இந்த தாக்குதலை உறுதிபடுத்தியுள்ளார். அத்துடன் வான் பாதுகாப்பு படைகளும், தீயணைப்பு படைகளும் தடுப்பு மற்றும் மீட்பு பணிகளில் அதிகாலையில் இருந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உக்ரைன் எல்லையில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவசர கால படையினரின் தகவல்படி, இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்ய அவசர கால பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.