ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் ட்ரோன் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் பலி
Ukraine's drone strikes on largest port of russia: ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
உக்ரேனிய நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
எரிபொருள் எண்ணெய் முனையம்
Novorossiysk-யில் ரஷ்யாவின் மிகப்பெரிய கடல் துறைமுகம் அமைந்துள்ளது. இதில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம், இரயில் பாதையில் இருந்து கடல் வழியாக எரிபொருள் எண்ணெயை பெறுதல், சேமித்தல் மற்றும் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றதாகும்.

இதன் ஆண்டு கையாளும் திறன் சுமார் 4 மில்லியன் டன்கள் ஆகும். இந்த எண்ணெய் முனையத்தின் மீது 9ஆம் திகதி இரவு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் கிராஸ்னோடார் கிராயின் தலைவர் வெனியாமின் கொன்ட்ராட் யேவ் தெரிவித்தார்.
மேலும் அவரது கூற்றுப்படி, மூன்று தனியார் மற்றும் ஐந்து அடுக்குமாடிக் கட்டிடங்கள், அத்துடன் ஒரு ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மற்றும் ஒரு மழலையர் பாடசாலை ஆகியவை சேதமடைந்தன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |