அந்த முடிவை உக்ரைன் கைவிட்டாலும்... ரஷ்ய படையெடுப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி காட்டம்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்
உக்ரைன் கைவிட்டாலும் அந்த நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக இல்லை
நேட்டோவில் இணையும் முடிவை உக்ரைன் கைவிட்டாலும் அந்த நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக இல்லை என முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருக்கமான வட்டத்தில் இருப்பவரான முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெத்வெதேவ் என்பவரே உக்ரைன் தொடர்பில் பதிலளித்துள்ளார்.
மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பிப்ரவரியில் முன்னெடுக்கப்பட்ட படையெடுப்பிற்கு முன்பே, உக்ரேனின் நேட்டோ உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ரஷ்யா தெளிவுபடுத்தியது. உக்ரைனில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் வரையில் இராணுவ நடவடிக்கை தொடரும் என்றே அவர் தெரிவித்துள்ளார்.
படையெடுப்பு தொடங்கிய பின்னர் ரஷ்யாவும் உக்ரைனும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர், ஆனால் அவை எந்த முன்னேற்றமும் அடையவில்லை மட்டுமின்றி மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.
@AP