ரஷ்ய ஆயுதம் தாங்கிய வாகனங்களையும் கட்டுப்பாட்டு மையத்தையும் ட்ரோன்கள் மூலம் சுத்தமாக காலி செய்த உக்ரைன்
ரஷ்ய ஆயுதம் தாங்கிய வாகனங்களையும், கட்டுப்பாட்டு மையம் ஒன்றையும் உக்ரைன் வீரர்கள் ட்ரோன் தாக்குதல் மூலம் சுத்தமாக காலி செய்வதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இணையத்தில் வெளியான வீடியோக்களில் ஒன்றில், Mariupol நகரில், ரஷ்யாவுக்கு சொந்தமான BTR-82 APC மற்றும் KamAZ-63968 'Typhoon' என்னும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள், உக்ரைன் படையினரின் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்படும் காட்சிகளைக் காணலாம்.
மற்றொரு வீடியோவில், Vasylivka என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கட்டுப்பாட்டு மையம் ஒன்று உக்ரைன் ட்ரோன்களால் தாக்கி அழிக்கப்படும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல்கள் எப்போது நடத்தப்பட்டன என்பது தெரியவில்லை.
அத்துடன், எத்தனை பேர் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.