கிழக்கு உக்ரைனில் முன்னேற முயன்ற ரஷ்யப் போர் வாகனங்கள் இரண்டை காலி செய்த உக்ரைன்: வீடியோ ஆதாரம்
ரஷ்யப் படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கடுமையாக தாக்குதல் நடத்தி வருவது பலரும் அறிந்ததே.
அப்படி கிழக்கு உக்ரைனில் முன்னேற முயன்ற ரஷ்யப் போர் வாகனங்கள் இரண்டை உக்ரைன் வீரர்கள் குண்டு வீசி அழிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யப் போர் வாகனங்களை தாக்கி அழிக்கும் காட்சிகளை சில ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள்.
அவ்வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சி ஒன்றில், ரஷ்யாவுக்குச் சொந்தமான MBT மற்றும் IFV ரக போர் வாகனங்கள் தாக்கி அழிக்கப்படுவதையும், அவற்றிலிருந்து இறங்கி ரஷ்யப் படையினர் உயிர் தப்ப ஓடுவதையும் காணலாம்.
A Russian MBT and an IFV were taken out while trying to advance at the eastern front.#Russia #Ukraine pic.twitter.com/EvFOoMBGE6
— BlueSauron?️ (@Blue_Sauron) June 22, 2022