மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி
உக்ரைன் ராணுவத்தின் முன்னாள் தளபதி, மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது
உக்ரைன் ராணுவத்தின் முன்னாள் தளபதியான Valery Zaluzhny, போர் தற்போது ரஷ்யாவுடனான போர் என்ற நிலையிலிருந்து பெரிதாகி, மூன்றாம் உலகப்போர் என்னும் நிலையை அடைந்துவிட்டது என்கிறார்.
உக்ரைன் போரில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா என்னும் இரண்டு வல்லரசு நாடுகளின் நேரடி தலையீடு அதை உறுதி செய்வதாக தெரிவித்துள்ள Zaluzhny, இப்போது பிற உலக நாடுகளான வடகொரியா, ஈரான் மற்றும் குறிப்பாக சீனா போன்ற நாடுகளின் தலையீட்டால் அது உக்ரைனுடனான போர் என்ற நிலையைத் தாண்டி பெரிய போராக மாறிவிட்டது என்கிறார்.
அதாவது, உக்ரைன் போரில் வடகொரிய வீரர்கள், ஈரானுடைய ட்ரோன்கள், வடகொரிய மற்றும் சீன ஆயுதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளதால், போர் சர்வதேச போராகிவிட்டது என்கிறார் Zaluzhny.
ஆக, 2024இல் மூன்றாம் உலகப்போர் துவங்கிவிட்டது என நாம் நிச்சயமாக நம்பலாம் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |