ரஷ்ய ட்ரோனை சீறிபாய்ந்து இடைமறித்த உக்ரைன் போர் விமானம்: அசத்தல் வீடியோ ஆதாரம்
பாலம் மீதான தாக்குதலை கண்டித்து உக்ரைன் மீது 100 ஏவுகணைக்கு மேல் ஏவி தாக்குதல்.
நடுவானில் ரஷ்ய ட்ரோனை இடைமறித்து அழித்த உக்ரைனிய போர் விமானம்
உக்ரைன் போர் விமானம் ஒன்று ரஷ்யாவின் காமிகேஸ் ட்ரோன்களை அதிரடியாக சுட்டு வீழ்த்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிரிமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது.
இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவும், உக்ரைனிய தலைநகர் கீவ் மற்றும் அதன் முக்கிய நகரங்களில் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது.
Ukrainian fighter aircraft intercepts Russian Kamikaze drones over Vinnytsia Oblast#Russia #Ukraine pic.twitter.com/hGxiEu5o93
— BlueSauron?️ (@Blue_Sauron) October 12, 2022
ரஷ்யாவின் இந்த தாக்குதல் அதிபயங்கரமாக இருந்த நிலையில், இதில் 26 பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து ரஷ்யாவின் இத்தகைய வான் தாக்குதலை உக்ரைன் சமாளிப்பதற்காக அமெரிக்கா உட்பட சில நாடுகள் உக்ரைனுக்கு வான் தடுப்பு தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் வின்னிட்சியா மாகாணத்தில் உக்ரைனிய போர் விமானம் ஒன்று ரஷ்யாவின் காமிகேஸ் ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹரியின் திடீர் மன மாற்றம்: வருத்தமும், பீதியுமே காரணம் என நிபுணர்கள் தகவல்
இது தொடர்பான வீடியோ ஒன்றை BlueSauron நிறுவனம் இணையத்தில் பதிவிட்டு, ரஷ்ய ட்ரோனை உக்ரைனிய போர் விமானம் வின்னிட்சியா மாகாணத்தில் இடைமறித்தது என எழுதியுள்ளது.