பாம்பு தீவை கலங்கடித்த உக்ரைன் ஏவுகணைகள்: அதிரடி தாக்குதல் வீடியோ!
ரஷ்ய கட்டுபாட்டில் இருக்கும் பாம்பு தீவின் இருப்புகள் மீது உக்ரைன் விமானப் படையின் Su-27 Flanker விமானம் ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் மூன்று மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தற்போது தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி வழங்கும் வகையில் ஏதிர் தாக்குதலை நடத்திவருகிறது, அந்தவகையில் ரஷ்யாவின் கட்டுபாட்டில் இருக்கும் பாம்பு தீவின் இருப்புகள் மீது உக்ரைனின் Su-27 Flanker போர் விமானம் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
பாம்பு தீவின் தெற்கு பகுதியில் மிகவும் தாழ்வாக பறந்த உக்ரைனின் Su-27 Flanker அடுத்தடுத்து நடத்திய துணிச்சலான தாக்குதலில் தீவின் பிரதான வளாகம் மற்றும் கப்பல் துறைக்கு அருகில் உள்ள கட்டிடங்களை நேரடியாக தாக்கி அழித்துள்ளது.
இந்த தாக்குதலானது பாம்பு தீவில் கப்பல் இறங்குதளம் மீது உக்ரைனின் TB2 ட்ரோன் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அச்சுறுத்தும் தக்காளி காய்ச்சல்... அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் என்னென்ன?
Su-27 Flanker போர் விமானத்தின் இந்த தாக்குதலை உக்ரைன் ராணுவத்தின், TB2 ட்ரோன் வீடியோ பதிவு செய்துள்ளது.