ரஷ்ய தூதரகத்தில் ஒளிர்ந்த உக்ரைன் தேசியக் கொடி: பிரித்தானியாவில் பரபரப்பு
உக்ரைனில் ரஷ்ய ஜனாதிபதி புதினின் மிருகத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது உக்ரைன் தேசிய கொடியின் மஞ்சள் மற்றும் நீல நிற வண்ணங்கள் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது.
நான்கு வாரத்துக்கும் மேலாக சர்வதேச விதிமுறைகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா பிரித்தானியா அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
Ukrainian flag projected on Russia Embassy in London #ukraine #london #russianembassy @frontlineclub pic.twitter.com/FNxM0DeonB
— Frontline Club (@frontlineclub) March 20, 2022
இதன் தொடர்ச்சியாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் மிருகத்தனமான படையெடுப்பை எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது உக்ரைன் தேசிய கொடியின் மஞ்சள் மற்றும் நீல நிற வண்ணங்கள் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக பிரண்ட்லைன் கிளப் வெளியிட்ட வீடியோ காட்சியில், நடிகை பைக் பைலைனுடன் இணைந்த எதிர்ப்பாளர்கள் குழு ஒன்று போரில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து "ஸ்ட்ரைட் ஃப்ரம் தி ஃப்ரண்ட்லைன்" என்று எழுதப்பட்ட ஒரு பேனரை கையில் ஏந்தி போராடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பைக் பைலைன், பத்திரிகையாளர்கள் நேரடியாக போர்க்களத்தில் நின்று எங்களுக்கு உண்மையைச் சொல்கிறார்கள், மேலும் அங்கு என்ன நடக்கிறது என்பதற்கு அவர்களே சாட்சியும் ஆகிறார்கள்.
இந்த உண்மைக்காக அவரகள் கொல்லப்படுகிறார்கள். இது உலகம் முழுவதும் நடக்கிறது, இப்பொது உக்ரைனிலும் நடக்கிறது, ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள், அவர்கள் விபத்தில் கொல்லப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டமானது கடந்த வாரம், Fox News ஒளிப்பதிவாளர் Pierre Zakrzewski மற்றும் உக்ரைன் பத்திரிகையாளர் Oleksandra Kuvshinova ஆகியோர் ரஷ்ய பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகை மிரட்டம் ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: சிறப்பம்சங்களின் தொகுப்பு