உலகை மிரட்டும் ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: சிறப்பம்சங்களின் தொகுப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரில், ரஷ்யாவின் மிகசிறந்த போர் ஆயுதங்களில் ஒன்றான ஹைப்பர்சோனிக் (Hypersonic missiles) ஏவுகணையான கிஞ்சலை (Kinzhal) முதன்முறையாக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய நடத்திவரும் போரில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கை அழிக்க ரஷ்யாவின் மிக சக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையான கிஞ்சலை முதன்முறையாக பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹைப்பர்சோனிக் ஏரோ பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கிஞ்சல் ஏவியேஷன் என்ற ஏவுகணை அமைப்பின் மூலம் உக்ரைனின் இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய கிடங்கை அழித்ததாக தெரிவித்து இருந்தது.
▫️Destruction of a weapons depot of the Armed Forces of Ukraine by high-precision missile weapons strike. We can see the exact hit of an underground hangar with weapons and ammunition. pic.twitter.com/sKTF46Tdb0
— Минобороны России (@mod_russia) March 19, 2022
ரஷ்ய ஜனாதிபதி புதன் கடந்த 2018 ஆண்டு வெளியிட்ட ரஷ்யாவின் புதிய ஆயுதங்களின் பட்டியல் வரிசையில் இந்த கிஞ்சல் ஏவுகணையும் ஒன்றாகும்.
மேலும், இது குறித்து விளாதிமிடிர் புதின் பேசுகையில் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் மற்றும் வான்-பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடிய கிஞ்சால் ஒரு சிறந்த ஆயுதம் இது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஹைப்பர்சோனிக், கிஞ்சல் ஏவுகணையின் சிறப்புகள்:
1. 1,500 முதல் 2,000 கிலோமீட்டர் வரை பறந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது
2. 480 கிலோ எடையுடைய அணுஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை பெற்றது.
3. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட ஃபேட் மேன் வெடிகுண்டின் சக்தியை விட 33 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
▫️Destruction of a weapons depot of the Armed Forces of Ukraine by high-precision missile weapons strike. We can see the exact hit of an underground hangar with weapons and ammunition. pic.twitter.com/sKTF46Tdb0
— Минобороны России (@mod_russia) March 19, 2022
4. மனிதர்கள் கேட்கும் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
5. மணிக்கு 4,900 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது மற்றும் மணிக்கு 12,350 கி.மீ வேகத்தை எட்டும் அளவிற்கு திறன் இருப்பதாக கருதப்படுகிறது.
6. மிகவும் ஆழமான பகுதிகளிலும் தாக்கும் அளவுக்கு திறன் கொண்டது.
7. பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறி, பூமியின் பரவளைய பாதைக்கு சென்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்பி வரும் சக்தி கொண்டது.
8. மற்ற ஏவுகணைகளை போல் அல்லாமல் வளிமண்டலத்தில் மிகவும் தாழ்வான நிலையில் சென்று தாக்குவதால் இதன் தாக்கும் திறன் அதிகரித்து எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கக்கூடியது.
9.ஏவுகணை தடுப்பு அமைப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும், எந்த அமைப்புகளாலும் தடுக்கவோஅல்லது ட்ராக் செய்யவோ முடியாது. 10. இதில் இரண்டு வகைகள் உள்ளது, அவை க்ளைட் வெகிக்கிள் (glide vehicles ) மற்றும் ( cruise missiles.) க்ரூஸ் ஏவுகணைகள் ஆகும்.
உக்ரைனில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்: பதறவைக்கும் Cctv காட்சிகள்