உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் உக்ரைன் மக்கள்: அதிர்ச்சி தரும் புதிய செயற்கைகோள் புகைப்படங்கள்!
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களில் உள்ள சூப்பர்மார்கெட்டில் தங்களுக்கான உணவு பொருள்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பான செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் ரஷ்யா தனது கடுமையான ராணுவ தாக்குதலை தொடர்ந்து முன்னகர்த்தி வந்த நிலையில் தற்போது கெர்சன் என்ற நகரப்பகுதியை ரஷ்யா முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இதனை அந்த பகுதியில் உள்ள உள்ளுர் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ், கார்க்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய பகுதியில் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.
இதனை தொடர்ந்து, உக்ரைனில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சேமித்து வைத்து கொள்ளவதற்காக தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர்மார்கெட் பகுதியில் நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர்.
இது தொடர்பான உக்ரைனின் செயற்கைகோள் புகைப்படம் தற்போது வெளியாகி, உலக மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தில்,ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான கட்டிடங்களில் இருந்து நெருப்பு மற்றும் புகை வெளிவந்து கொண்டிருக்க, ராணுவ டாங்கிகளின் பாதுகாப்பிற்கு மத்தியில் உக்ரைன் மக்கள் நீண்ட வரிசையில் உணவு பொருள்களை வாங்குவதற்காக காத்திருக்கின்றனர்.
மேலும், பலர் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு அவசரஅவசரமாக வெளியேறியும் வருகின்றனர்.
இதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி சுமார் 1மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று விட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.