வலுவான ஆயுதங்களால் ரஷ்யாவை தாக்கலாம்... உக்ரைனுக்கு கட்டுப்பாடுகளை நீக்கிய மேற்கத்திய நாடுகள்
ஜேர்மனி உட்பட மேற்கத்திய நாடுகள் அளித்துள்ள ஆயுதங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாகவும், இனி ரஷ்யா மீது உக்ரைன் தீவிர தாக்குதலை முன்னெடுக்கலாம் எனவும் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
வரம்பு கட்டுப்பாடுகளும் இல்லை
ஜேர்மனியின் புதிய சேன்சலராக இந்த மாதம் பொறுப்புக்கு வந்துள்ள ஃப்ரெட்ரிக் மெர்ஸ், உக்ரைனுக்கு இராணுவ ரீதியாக உட்பட, தொடர்ந்து ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று சபதம் செய்திருந்தார்.
தற்போது திங்களன்று பேசிய அவர், உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களுக்கு இனி எந்த வரம்பு கட்டுப்பாடுகளும் இல்லை. பிரித்தானியா, பிரான்ஸ் அல்லது அமெரிக்க ஆயுதங்களை இனி உக்ரைன் துணிந்து பயன்படுத்தலாம் என அவர் அறிவித்துள்ளார்.
இதன் பொருள் உக்ரைன் தற்போது ரஷ்யாவில் உள்ள இராணுவ நிலைகளைத் தாக்குவதன் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்றார்.
ஆனால், இதற்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைனுக்கான நீண்ட தூர ஏவுகணை திறன்கள் மீதான கட்டுப்பாடுகளை ஐரோப்பிய நாடுகள் நீக்குவது ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
தீர்வு காணும் நோக்கங்களுக்கு
அத்துடன், அத்தகைய முடிவு தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கங்களுக்கு எதிரானதாக இருக்கும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
ரஷ்யாவிற்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கக்கூடிய Taurus ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதை தான் ஆதரிப்பதாக மெர்ஸ் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் கட்டுப்பாடுகள் நீக்கபப்ட்டுள்ள நிலையில் ஜேர்மனி தற்போது உக்ரைனுக்கு Taurus ஏவுகணைகளை அனுப்புமா என்பதை மெர்ஸ் கூறவில்லை.
மேலும், உக்ரைனின் மேற்கத்திய ஆதரவாளர்கள் அனைவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த முயன்றதாக மெர்ஸ் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |