9 வயது உக்ரைனிய சிறுமிக்கு ”நோ” சொன்ன பிரித்தானியா: உறவினருடன் போலந்தில் தவிப்பு!
செய்தி சுருக்கம்:
- 9 வயது உக்ரைனிய சிறுமி அலிசா மிரோஷினா பிரித்தானியாவிற்குள் வர அனுமதி மறுப்பு.
- அலிசா(9), அவரது உறவினர் விக்டோரியா(38) மற்றும் அனஸ்தேசியா(14) அகிய முவரும் போலந்தில் சிக்கி தவிப்பு.
- ரஷ்ய போரில் தாய் நாட்டிற்காக சண்டையில் இறங்கிய அலிசா மிரோஷினாவின் பெற்றோர்.
உக்ரைனில் இருந்து தனது உறவினருடன் வெளியேறிய 9 வயது சிறுமி அலிசா மிரோஷினாவை போதிய ஆவணங்கள் இருந்தும் பிரித்தானியாவில் தஞ்சம் அடைவதற்கான அனுமதியை அந்த நாட்டு அரசாங்கம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய இடையே நிலவிவரும் போர் பதற்றத்தால் தங்களது சொந்த நாட்டில் இருந்து கிட்டதட்ட 5.2 மில்லியன் உக்ரைன் மக்கள் அருகில் இருக்கும் ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன.
இந்த வரிசையில், பிரித்தானியா பிரதமர் வெளியிட்ட உக்ரைனில் அகதிகளுகான அனுமதி கொள்கை( பிரித்தானியாவில் உக்ரைனில் வசிக்கும் உறவினர்கள் இருந்தால் அவர்களை தங்களுடன் இணைத்து கொள்ளும் அனுமதி) பிறகு பெருவாரியான உக்ரைன் பொதுமக்கள் பிரித்தானியாவிற்கும் தஞ்சம் அடைய தொடங்கினர்.
இதன் அடிப்படையில், உக்ரைனில் இருந்து பிரித்தானியாவிற்கு தனது உறவினருடன் தஞ்சம் அடைய முயற்சித்த 9 வயது சிறுமி அலிசா மிரோஷினா-விற்கு போதிய ஆவணங்கள் இருந்தும் பிரித்தானிய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் அலிசா மிரோஷினா(9) தனது உறவினர் விக்டோரியா சௌச்கா (38) மற்றும் அனஸ்தேசியா (14) ஆகியோருடன் போலந்தில் 5 வாரங்களாக சிக்கி தவித்து வருகின்றன.
இதுகுறித்து விக்டோரியா சௌச்காவிற்கு பிரித்தானியாவில் புகழிடம் வழங்க முன்வந்த ஹார்டில்பூல் பகுதியை சேர்ந்த அவரது உறவினர் நிக் ஆண்டர்சன் மற்றும் கரேன் ஜோன்ஸ் ஜோடி பேசிய போது, சௌச்காவை பிரித்தானியாவிற்கு வர வைப்பதற்கு 5 வாரங்களாக போராடி வருகிறோம்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவுடன் மோதும் நோட்டோ...அணுஆயுத போராக மாறும் அபாயம்: ரஷ்யா எச்சரிக்கை!
ஒருவழியாக அனைத்து ஆவணங்களும் சமர்பிக்கபட்டுவிட்டன, ஆனால் தற்போது புதிய திருப்பமாக அலிசா மிரோஷினா(9) விக்டோரியா சௌச்காவிற்கு (38) உறவினர் தான் என்பதற்கான போதிய ஆதாரம் இல்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசு அதிகாரிகளின் இந்த விளக்கத்தால் அலிசா,விக்டோரியா மற்றும் அனஸ்தேசியா அகிய முவரும் போலந்தில் சிக்கி தவித்து வருகின்றன.
அலிசா மிரோஷினா(9)-வின் தாய் மற்றும் தந்தை ரஷ்யாவுடனான போரில் தங்களையும் இணைத்துள்ளதால், அலிசா தனது உறவினர் விக்டோரியா சௌச்கா (38) மற்றும் அனஸ்தேசியா (14) ஆகியோருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.