ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி)
போர்க்களத்தில் உக்ரைன் ரோபோக்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கின் வளைகுடாவில் மிகப்பெரிய போர்ப்பதற்றம் உள்ள நிலையில், போர்க்களங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ரோபோ தயாரிப்பு திட்டங்கள், ரோபோ கவச வாகனங்கள் இவையெல்லாம் மிகையான செலவுகள் காரணமாக நிறுத்தப்பட்ட திட்டங்களாக காணப்படுகிறது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பால் தற்போது கிடைத்திருக்கக் கூடிய தரவுகளின்படி, உக்ரைனுடைய களமுனைகளில் 5000 முதல் 30,000 டொலர்கள் செலவிலேயே செய்யக்கூடிய ரோபோக்கள், அமெரிக்காவின் போர்க்களங்களில் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
சண்டையிடக்கூடிய ரோபோக்களை அமெரிக்காவிற்கும், மேற்கு உலகிற்கும் வழங்குவதற்கு உக்ரைன் தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற செய்தி இப்போது கிடைக்கப்பெற்றிருக்கிறது.
உக்ரைனில் 5 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போர் மிகப்பெரிய அளவில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |