உணவு தானிய நெருக்கடியின் விளிம்பில் உலகம்... சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை கைவிட்ட ரஷ்யா
உலகின் ஏழ்மையான நாடுகளில் உணவுப் பற்றாக்குறையையும் பாரிய விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தியுள்ளது
தங்களின் கடற்படைக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டி தொடர்புடைய ஒப்பந்தம் ரத்து
உக்ரைனில் இருந்து உலக வணிகங்களுக்காக தானியங்களை வெளியேற்றும் சிறப்பு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா தடாலடியாக விலகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் வேளாண் பொருட்கள் உலக சந்தைகளுக்கு எட்டாமல் உள்ளது. போரின் தாக்கம் காரணமாக உலகின் சில ஏழ்மையான நாடுகளில் உணவுப் பற்றாக்குறையையும் பாரிய விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
@getty
இந்த நிலையில், உலகின் உணவு நெருக்கடியை போக்கும் வகையில் சிறப்பு ஒப்பந்தம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து ரஷ்ய கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் வழியாக முக்கிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை அனுமதிக்கும் ஒப்பந்தம் மூன்று மாதங்களாக நடந்து வருகிறது.
ஆனால் இன்று அதிகாலையில் தங்களின் கடற்படைக் கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டி தொடர்புடைய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. தீவிரவாத தாக்குதல் என குறிப்பிட்டு ரஷ்யாவின் இந்த அபாண்ட குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளது உக்ரைன்.
தற்போது ரஷ்யாவின் இந்த முடிவு மீண்டும் உணவு நெருக்கடியின் விளிம்பில் உலக நாடுகளை தள்ளியுள்ளது. ரஷ்யா ஏற்படுத்தியுள்ள இந்த நெருக்கடி தொடர்பில் ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய சுகாதாரத் தலைவர்கள் பலர், பஞ்சம் ஏற்படக்கூடிய வாய்ப்பைப் பற்றி எச்சரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
@getty
உக்ரைன் மீதான போருக்கு பின்னர், அவர்களால் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் ஏற்படவே,
ஐக்கிய நாடுகள் மன்றம் தலையிட்டு, ஒன்பது மில்லியன் டன் தானியங்கள் உக்ரைனில் இருந்து வெளியேற ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது, இது உலகளவில் தானியங்களின் விலையில் சரிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.