உக்ரைன் தானிய ஏற்றுமதி... பிரித்தானிய பிரதமர் அளித்த முக்கிய உறுதி

Boris Johnson Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Arbin Jun 23, 2022 08:17 PM GMT
Report

உக்ரைனின் தெற்கு கடற்கரையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு பிரித்தானியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, உக்ரைனில் தேங்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை கொண்டு செல்ல கப்பல்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக போரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமரின் இந்த அறிக்கையானது தற்போது இந்த விவகாரத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் கருங்கடல் பகுதி துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியானது முற்றாக முடங்கியது.

உக்ரைன் தானிய ஏற்றுமதி... பிரித்தானிய பிரதமர் அளித்த முக்கிய உறுதி | Ukraine Grain Export Boris Johnson Signals

உலகின் முதன்மை தானிய உற்பத்தியாளர்களில் ஒருவரான உக்ரைனில் தற்போது 20 மில்லியன் டன் தானியங்கள் தேங்கியுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாப்பிட உணவின்றி சிரமத்திற்கு உள்ளாகினர்.

மட்டுமின்றி, இந்த நெருக்கடி இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்கும் என்று மேற்கத்திய நிபுணர்கள் தரப்பு கூறி வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர துருக்கியும் ஐக்கிய நடுகள் மன்றமும் ஒன்றிணைந்து நான்குவழி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முயற்சி மேற்கொண்டுவருகிறது.

ஆனால், மேற்கத்திய நாடுகள் குறிப்பிட்ட தடைகளை விலக்கினால் மட்டுமே இந்த விவகாரத்தில் ரஷ்யா உதவ முடியும் என கூறி வருகிறது. இந்த நிலையில், துருக்கி மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் பேசி வருவதாகவும், தங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்பதை விவாதித்து வருவதாகவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தானிய ஏற்றுமதி... பிரித்தானிய பிரதமர் அளித்த முக்கிய உறுதி | Ukraine Grain Export Boris Johnson Signals

கப்பல்களுக்கு காப்பீடு அளிக்கவும், தானியங்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் பிரித்தானியாவால் திறம்பட செய்ய முடியும் என நம்புவதாக போரிஸ் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்ணிவெடிகள் அகற்றுவது தொடர்பில் தங்களால் உதவ முடியும் என குறிப்பிட்டுள்ள ஜோன்சன், தொழில்நுட்ப ரீதியாக உக்ரைன் துருப்புகளை தங்களால் தயார் செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தானிய ஏற்றுமதி... பிரித்தானிய பிரதமர் அளித்த முக்கிய உறுதி | Ukraine Grain Export Boris Johnson Signals

இதனிடையே, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியைத் தடுப்பதன் மூலம் ரஷ்யா உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டுவதாக குற்றம் சாட்டின.

மேலும், மில்லியன் கணக்கான டன் உக்ரேனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதன் மூலம் ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக இந்த வார தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US