ரஷ்யாவிற்கு அனைத்து சலுகைகளும் செய்ய தயார்: உக்ரைன் தூதர் அறிவிப்பு!
நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணையும் விருப்பத்தை கிளிவ் மறுபரிசீலனை செய்யலாம் என கூறிய பிரித்தானியாவின் உக்ரைன் தூதர் vadym prtystaiko தெரிவித்த கருத்தை திரும்பப்பெறுள்ளார்.
உக்ரைன் நோட்டோ அமைப்புடன் இணையும் விருப்பத்தை துறந்தால் அது ரஷ்யாவுக்கு மிக பெரிய ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பிரித்தானியாவின் உக்ரைன் தூதர் vadym prtystaiko பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஷ்யாவுடன் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையினால் உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய வேண்டுகோளுக்கு வளைந்து செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணையும் விருப்பத்தை கிளிவ் மறுபரிசீலனை செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தான் பேசியது தவறாக புரிந்து கொல்லப்பட்டதாகவும், நோட்டோ அமைப்பில் இணையும் திடத்தை தவிர்த்து, வேறு எந்த சலுகைகளுக்கும் உக்ரைன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை நாங்கள் நேட்டோ அமைப்பில் இல்லை எனவும், அது சட்டப்பூர்வமாக அனைவரும் அறிந்ததே எனவும் தெரிவித்தார்.
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் பதற்றம் நிலவிவரும் சூழலில் பேச்சுவார்த்தைக்காக ஜெர்மனின் அதிபர் olaf scholz உக்ரைனின் கிளிவ் நகருக்கு வந்தடைந்துள்ளார்.