பின்லாந்து வளைகுடாவில் ரஷ்ய போர்க்கப்பல் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
Ukraine drones hits russian war vessel in Gulf of Finland: ரஷ்ய போர்க்கப்பல் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய போர் கப்பல் மீது தாக்குதல்
புதன்கிழமை பின்லாந்து வளைகுடாவில் ரஷ்ய போர் கப்பல் மீது உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பது பின்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைனிய பாதுகாப்பு சேவைகள் வெளியிட்ட தகவலில், Kalibr, Oniks ஆகிய ஏவுகணைகளை ஏவக்கூடிய Naro-Fominsk என்ற ரஷ்யாவின் சிறிய ரக போர்க்கப்பலை குறிவைத்து தாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் Ust-Luga என்ற எண்ணெய் முனையத்தை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த போர்க்கப்பலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதல் நடவடிக்கையில் ரஷ்ய ஹெலிகாப்டர் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
பால்டிக் கடல் பிராந்தியமானது வணிக ரீதியான கப்பல் போக்குவரத்து நடைபெறும் முக்கிய கடல்வழித் தடமாகும். இந்த பகுதியில் ரஷ்ய போர்க்கப்பலை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஃபின்லாந்து கடற்கரையில் இருந்து மிக அருகில் அமைந்துள்ள குறுகிய கடல் வழிப் பாதையில் இந்த தாக்குதலானது நடந்து இருப்பதாக பின்லாந்து ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.