ரஷ்ய ஏவுகணையால் முற்றிலும் சேதமான வீடு! இளம்தாயார் மற்றும் குழந்தைக்கு நேர்ந்த நிலை.. வீடியோ காட்சி
உக்ரைனில் உள்ள வீட்டின் அருகே ரஷ்யாவின் ஏவுகணை தாக்கியதால் வீட்டில் இருந்த இளம் தாயார் மற்றும் குழந்தை காயமடைந்தனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
நாட்டில் எப்போது எங்கு குண்டு வெடிக்கும், ஏவுகணை பாயும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
In the video shared by an Ukrainian man, it is seen that his wife and baby were wounded after a Russian missile hit near their house#Ukraine #Russia #Zelensky #Mariupol pic.twitter.com/pitO2JwAbf
— UKRAINIAN WAR (@ukrainainwar) March 27, 2022
அதில் அந்த வீட்டின் அருகே ஏவுகணை தாக்கியதில் அதன் தாக்கம் காரணமாக வீடு முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது.
இதோடு அந்த நபரின் மனைவி மற்றும் குழந்தையும் இதில் காயமடைந்துள்ளனர். காயம்பட்ட குழந்தை மிரட்சியுடன் அந்த வீடியோவில் காணப்படுவதும் தெரிகிறது.