உக்ரைன் போரில் உதவுங்கள்: சீனாவிடம் கெஞ்சிய ரஷ்யா
உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை நாடியுள்ளது ரஷ்யா.
உக்ரைன் போர் தொடர்பில் சீனாவின் உதவியை ரஷ்யா நாடியுள்ள தகவல் முக்கிய பத்திரிகைகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பும் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கள்கிழமை ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா சிறப்பு நடவடிக்கை என குறிப்பிட்டு வரும் நிலையில், மனித உரிமைகள் மற்றும் பிற பிரச்சினைகளின் மீது வலுவான மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதால், சீனா ஒத்துழைப்பை கடினப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் இதுவரை ரஷ்யாவை கண்டிக்காத சீனா, அதை ஒரு படையெடுப்பு எனவும் குறிப்பிட மறுத்து வருகிறது.
ஆனால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது. இதனிடையே ஆயுதங்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் சீனாவின் பதில் குறித்து தகவல் வெளியாகவில்லை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.