படையெடுக்க தயாராகும் ரஷ்யா... எல்லையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் குவிப்பு
ரஷ்ய துருப்புக்கள் முழு வீச்சிலான படையெடுப்பை நெருங்கி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை உக்ரைன் எல்லைக்கு அருகில் குவிந்துள்ளன.
இது தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளதுடன், உக்ரைன் எல்லையில் சுமார் 100,000 துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, பெலாரஸ் நிர்வாகமும் அகதிகள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் நிலை தொடர்பில் அமெரிக்க நிர்வாகம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்புக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புகள் உக்ரைனின் கிரிமியா பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, உக்ரைனுக்கான எரிபொருள் விநியோகம் மொத்தமும் ரஷ்யா முடக்கியுள்ள நிலையில், மக்களிடையே பீதியை உருவாக்க மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையிலும் ரஷ்யா ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
மேலும், தடுப்பூசி எதிர்ப்பாளர்களை தூண்டிவிட்டு, உக்ரைன் தலைநகரில் ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தவும் ரஷ்ய உளவுத்துறை முயன்று வருகிறது.
தற்போது உக்ரைன் மீது படையெடுப்புக்கு தயாராகும் ரஷ்ய துருப்புகள் Yelnya, Bryansk மற்றும் Kursk ஆகிய எல்லையோர நகரங்களில் முகாமிட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக, ரஷ்ய- உக்ரைன் எல்லையான 300 மைல்கள் தொலைவு கொண்ட பகுதிக்கு 8,500 துருப்புகளை உக்ரைன் அனுப்பி வைத்துள்ளது.