ரஷ்யாவுடன் சேர்த்து பெலாரஸை எதிர்க்கவும் தயார்: உக்ரைன் பாதுகாப்பு செய்திதொடர்பாளர் அதிரடி!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்கையில் பெலாரஸ் இணைந்தால், அவர்களையும் எதிர்க்க உக்ரைன் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் மாநில எல்லைப் பாதுகாப்பு படையின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம் உச்சகட்டத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் உக்ரைனின் மிக நெருங்கிய அண்டை நாடான பெலாரஸ், புதன் கிழமையான இன்று மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ராணுவ பயிற்சியானது, வழக்கமான ராணுவ நடைமுறையே தவிர, அண்டை நாட்டை பயமுறுத்தும் எந்தவொரு உள் நோக்கமும் கொண்டது இல்லை என பெலாரஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பெலாரஸின் இந்த ராணுவ பயிற்சி குறித்து பேசியுள்ள உக்ரைனின் மாநில எல்லைப் பாதுகாப்பு படையின் செய்திதொடர்பாளர் ஆண்ட்ரி டெம்சென்கோ, ரஷ்ய ராணுவம் பெலாரிஸ் நாட்டை உக்ரைனின் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தாது என்ற கூற்றை நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த ஆத்துமீறி தாக்குதலில் பெலாரஸ் இணைந்தால், அதனை எதிர்க்கவும் உக்ரைன் ஆயுதப்படை தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு:
ரஷ்யாவின் போர் தாக்குதல் தொடங்கிய நாள் முதலே பெலாரஸ் நாட்டுடனான எல்லையை பலப்படுத்தி விட்டதாகவும், இந்த போர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு பெலாரஸ் நாட்டுடன் ரஷ்ய நடத்திய கூட்டு ராணுவ பயிற்சியின் மூலமே உக்ரைனில் எல்லையில் பெரும் படை ஒன்று குவிக்கபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.