ரஷ்யாவில் 13 வடகொரிய வீரர்களை கொன்ற உக்ரைன் சிறப்பு படைகள்
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் கடும் போரில் 13 வடகொரியா வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவ சிறப்பு படைகள் தெரிவித்துள்ளனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் உடல்களின் புகைப்படங்களையும் அடையாள ஆவணங்களையும் டெலிகிராமில் பகிர்ந்துள்ளனர்.
குர்ஸ்க் பகுதியில் கடும் போர்
குர்ஸ்க் பிராந்தியத்தில், கடந்த சில மாதங்களாக உக்ரைன் படைகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர், பெரும் நிலப்பகுதியை கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைனின் பொது ஆணையம், புதிதாக தாக்குதல்கள் தொடங்கியதாகவும் பிலாயா அருகே ரஷ்ய கட்டளை மையம் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதே சமயம், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம், உக்ரைன் படைகள் தோல்வியடைந்ததாகவும், ஆறு இடங்களில் தாக்குதல்களை முடக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
வடகொரியா வீரர்களின் பங்கேற்பு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் வடகொரிய வீரர்கள் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்போரில் இதுவரை 3,000க்கும் மேற்பட்ட வடகொரியா வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் கூறுகிறது.
இவர்களின் திறமையின்மையால், ரஷ்ய கமாண்டர்கள் இவர்களை போரில் பயன்படுத்த தாமதம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |