ரஷ்ய வாகனங்களை ஒற்றை ஆளாக எதிர்த்து நின்ற உக்ரைன் குடிமகன்! மெய் சிலிர்க்கவைக்கும் காட்சி
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ வாகனங்கள் வாகனத் தொடரணியை தடுக்கும் முயற்சியில் துணிச்சலாக ஈடுபட்ட உக்ரைன் குடிமகனின் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.
1989-ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் தியனன்மென் சதுக்கத்தில் (Tiananmen Square) ஒற்றை ஆளாக இராணுவ டாங்கிகளை எதிர்த்து இன்ற 'டேங்க் மேன்' மனிதரை நினைவூட்டும் வகையில், உக்ரைனிலும் ஒருவர் ரஷ்ய வாகனங்களை தனியொரு ஆளாக எதிர்த்து நின்றுள்ளார்.
உக்ரைனின் தெற்கில் உள்ள கிரிமியாவிற்கு அருகில் இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
ரஷ்ய படையெடுப்பாளர்களை தடுத்து நிறுத்த உக்ரேனியர்கள் பெட்ரோல் குண்டுகளை (Molotov cocktails) பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், ரஷ்ய வாகனங்கள் அந்த நபரை மீறி மிகவும் வேகமாக சென்றன.