உக்ரைனில் இருந்து கடைசி தானிய கப்பலும் புறப்பட்டது... சிக்கலில் ஒப்பந்தம்: இறுகும் நெருக்கடி
போர் நடுவே உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதிக்கு நிறுவப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், கடைசி தானிய கப்பலும் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்பந்தம் நீட்டிக்க ரஷ்யா மறுப்பு
தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் முடிவுக்கு வர இனி சில மணி நேரமே எஞ்சியுள்ள நிலையில், கடைசி கப்பலும் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் இருந்து புறப்பட்டுள்ளது. துருக்கி நாட்டுக்கு சொந்தமான TQ Samsun என்ற கப்பல் ஞாயிறன்று புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
@reuters
ரஷ்யா தனது சொந்த தானியங்கள் மற்றும் உரங்கள் மீதான அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஐ.நா தலையீட்டின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு 2022ல் ஐ.நா. த;லையீட்டின் கீழ் ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் உலகின் சிறந்த தானிய ஏற்றுமதியாளர்களாகவே நீடிக்கின்றனர். இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் TQ Samsun என்ற கப்பல் துருக்கிய நகரமான இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு ஏற்றுமதிக்கான தடை
தானிய ஒப்பந்தம் காலாவதியாவது தொடர்பில் உக்ரைன் இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, ரஷ்யாவின் சொந்த உணவு ஏற்றுமதிக்கான தடைகளை அகற்றுவதற்கான உறுதிமொழிகள் மற்றும் பிற முக்கிய ஏற்பாடுகள் நிறைவேற்றப்படவில்லை என்று சனிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
@reuters
அதாவது, உக்ரைனில் இருந்து இனி தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றே ரஷ்யா சூசகமாக கூறுவதாக குறிப்பிடுகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையே, ஆப்பிரிக்க கண்டம் உட்பட தேவைப்படும் நாடுகளுக்கு தானியங்களை வழங்குதல் என்பதாகும்.
ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா உடனான தொலைபேசி உரையாடலில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
உலகம் பட்டினியை அனுபவிக்க வேண்டாம்
ரஷ்யாவின் நிலை என்னவென்றால், வேளாண் கொடுப்பனவுகள் அனைத்திலும் தங்கள் வங்கியையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது. ஆனால், உக்ரைன் படையெடுப்பின் காரணமாக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய வங்கிகளை மீண்டும் நிறுவுவது குறித்து பரிசீலிக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
@reuters
இதனிடையே, 120 நாட்களுக்கு ஒப்பந்தம் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள ரஷ்யா, 60 நாட்கள் என ஒப்புக்கொண்டது.
இந்த விவகாரத்தில் ஐ.நா பொதுச்செயலாளரை தொடர்புகொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி, தங்கள் நாடு எதிர்கொள்ளும் பிரச்சனையால் உலகம் பட்டினியை அனுபவிக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |