ஒரு கோடி மக்கள் தொகையை இழந்த நாடு! 67 லட்சம் மக்கள் ஐரோப்பாவில் தஞ்சம்
ரஷ்யாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி மக்கள் தொகையை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிறப்பு விகிதம்
உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஏற்கனவே உக்ரைனில் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள நிலையில், போர் காரணமாக அந்நாடு ஒரு கோடி மக்கள் தொகையை இழந்துள்ளது.
அங்கு சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறப்பதால், உக்ரைனில் பிறப்பு விகிதம் ஒரு சதவீதம்தான்.
இதன் காரணமாக உக்ரைனில் மக்கள்தொகை சூழ்நிலையை பராமரிக்க குறைந்தபட்ச பிறப்பு 2.1 சதவீதம் தேவைப்படுகிறது.
நிலைமை மோசமடைந்து வருகிறது
ஜெனீவா மாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவுக்கான ஐநா மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் புளோரன்ஸ் பாயர் இதுகுறித்து கூறுகையில், "பிப்ரவரி 2022யில் ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர், உக்ரைனில் மக்கள்தொகை நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் உக்ரைனில் பிறப்பு விகிதம் ஒரு சதவீதமாக குறைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான போர் காரணமாக மக்கள் தொகை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, போர் சூழலில் உக்ரைனில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்ததே முக்கிய காரணம் ஆகும். இதனால் அந்நாட்டு கிராமங்களில் வெகுவாக மக்கள்தொகை குறைந்துள்ளது.
67 லட்சம் வெளியேற்றம்
முதியவர்கள் மட்டுமே அங்குள்ள வீடுகளில் உள்ளனர். இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தாலும், உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஆனாலும், இளம் தலைமுறையினர் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறி வருவதால், குடும்பத்தில் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ள ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சுமார் 67 லட்சம் வெளிநாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பாவிலும் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |