மருத்துவமனை, வீடுகளை குறிவைத்து தாக்கும் ரஷ்ய படை! வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள்
ரஷ்ய இராணுவம் உக்ரைன் நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளை குறைவைத்து தாக்கிவருகின்றனர்.
ரஷ்ய படையினரின் தாக்குதலில் உக்ரைனில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று மரியுபோல் (Mariupol). கருங்கடல் துறைமுக நகரமான மரியுபோலில் குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெரும்பாலான கட்டிடங்கள் பற்றி எரிந்துகொண்டு இருக்கின்றன, மேலும் நகரம் முழுக்க புகைமூட்டங்களாக காணப்படுகின்றன. அமெரிக்க தனியார் நிறுவனமான Maxar Technologies மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மரியுபோல் நகரத்தின் நிலைமையை காட்டுகின்றன.
மரியுபோல் ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டாலும், இன்னும் உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரேனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா சனிக்கிழமை கூறினார்.
மரியுபோலில் நிலைமை விரக்தியுற்றதாக உள்ளது, இங்கு தண்ணீர், வெப்பமாக்கல் இல்லை என்றும் உணவுப் பொருட்களும் குறைந்து வருகின்றன என்று அந்நகரத்திலுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.