ரஷ்ய கிராமங்களை சூறையாடிய உக்ரைன்: சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்: 6 பேர் பலி
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்
ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ரஷ்ய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலில், கிட்டத்தட்ட 285 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தி உள்ளன.
இந்த தாக்குதல் உக்ரைனின் எல்லையை ஒட்டிய பெல்கோரோட், பிரியான்ஸ்க் மற்றும் குர்ஸ்க் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் உயிரிழப்பு
உக்ரைனின் சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 30 குடியிருப்பு வீடுகள் உக்ரைன் தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளன.
உக்ரைனிய ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் மேலும் ஒரு ஆணின் உடலை பத்திரமாக மீட்டுள்ளனர்.
பேரழிவுகரமான இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |