ரஷ்யாவின் காமிகேஸ் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்
உக்ரைனிய விமானப்படை வீரர்கள் எதிரி நாட்டின் ட்ரோனை சுட்டு வீழ்த்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 3 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வரும் நிலையில் இருநாட்டு படைகளும் அவ்வப்போது பயங்கர மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கிழக்கு உக்ரைனில் இரண்டு கிராமங்களை தனது படைகள் கைப்பற்றியதாகவும், தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
Hunting for "Shaheds"
— NEXTA (@nexta_tv) December 10, 2024
In the network appeared a video of the Ukrainian Air Force at the end of November this year. Mi-8 helicopter pilots escorted an enemy kamikaze drone while it was leaving a populated area and shot it down over a forest. pic.twitter.com/3j4Nfu4zjY
இந்நிலையில் உக்ரைனிய நிலப்பரப்பிற்கு நுழைந்த ரஷ்யாவின் காமிகேஸ் ஆளில்லா விமானத்தை(kamikaze drone) உக்ரைனிய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
எதிரி நாட்டின் காமிகேஸ் ஆளில்லா விமானத்தை உக்ரைனிய விமானப்படையின் Mi-8 ஹெலிகாப்டர் விமானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்ததோடு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றி காட்டுப் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தினர்.
மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் உக்ரைனிய விமானப்படை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |