ரஷ்ய துருப்புகளை விரட்டியடித்துவிட்டோம்! உக்ரைன் ஆயுதப்படை முக்கிய அறிவிப்பு
கீவ்வுக்கு அருகில் உள்ள மக்காரிவ் நகரை தங்கள் படைகள் மீட்டுள்ளதாகக் உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது 27வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா படைகள், அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயற்சி செய்துவருகின்றனர்.
அதேசமயம், ரஷ்ய படைகள் மரியுபோல் நகரம் மீது தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் ஆயுதப்படைகளின் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைன் துருப்புக்கள், ரஷ்ய துருப்புக்களை தலைநகருக்கு மேற்கே 60 கிமீ தொலைவில் உள்ள மக்காரிவ் நகரத்திலிருந்து விரட்டியடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எங்கள் வீரர்களின் வீரச் செயல்களுக்கு நன்றி, உக்ரைன் கொடி மக்காரிவ் நகரத்தின் மீது உயர்த்தப்பட்டது.
எதிரிகள் மக்காரிவ் நகரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் என்று அது தனது பேஸ்புக் பக்கத்தில் உக்ரைன் ஆயுதப்படைகளின் தளபதி அறிவித்துள்ளார்.