பாம்பு தீவில் ஆயுதங்கள் தாங்கி சென்ற ரஷ்ய கப்பல்! அழித்து மூழ்கடித்த உக்ரைன் ஏவுகணை.. வீடியோ
உக்ரைனின் பாம்பு தீவிற்கு ஆயுதங்களை கொண்டு சென்ற ரஷ்ய கப்பல் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் ஆயுதங்களை ஏற்றிச்சென்ற ரஷ்ய கப்பல் அழிக்கப்பட்டது. பாம்பு தீவானது ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலேயே இந்த சம்பவத்தை உக்ரைன் செய்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய கப்பல் கடலில் மூழ்கியது. அதன்படி Harpoon ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
#Ukraine: Big news from the Black Sea- the Ukrainian Navy claims to have destroyed the Russian "Vasily Bekh" rescue vessel, as it travelled to the famous Snake Island; it reportedly had a Tor-M2KM SAM system on board.
— ?? Ukraine Weapons Tracker (@UAWeapons) June 17, 2022
The strike was filmed by a TB-2 drone; 2 munitions are used. pic.twitter.com/pCjMf2RX4d
இது தொடர்பான வீடியோவை உக்ரைன் கடற்படையினர் வெளியிட்டுள்ளனர். ட்ரோன் கேமரா மூலம் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
1977 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை சேவையில் Harpoon ஏவுகணைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில் இருந்து, Harpoon ஏவுகணை மேற்கத்திய கப்பல் எதிர்ப்பு ஆயுதமாக மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.