வெளிநாடொன்றில் உடைந்த முதுகெலும்புடன் சாலையோரத்தில் மீட்கப்பட்ட உக்ரைன் மொடல்
விவாதத்திற்குரிய விருந்து ஒன்றில் கலந்துகொண்ட உக்ரைன் மொடல் ஒருவர் நொறுங்கிய முதுகெலும்புடன் சாலையோரத்தில் இருந்து மீட்கப்பட்ட விவகாரத்தில் தற்போது பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
அடிமையாக்கும் குழுக்களிடம்
குறித்த மொடல் உயரத்திலிருந்து விழுந்துவிட்ட காரணத்தாலையே மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரேனிய மொடலான 20 வயது Maria Kovalchuk ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட விவாதத்திற்குரிய விருந்து ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விருந்தில் விருந்தினர்கள் மற்ற விருந்தினர்களுக்கு முன்பாகவோ அல்லது அவர்கள் மீதும் கலகத்தனமான செயல்களைச் செய்யும்படி கேட்கப்படலாம். ஆனால், விருந்துக்கு சென்றவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமல் போகவே, குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
அவர் பாலியல் அடிமையாக்கும் குழுக்களிடம் சிக்கியிருக்கலாம் என்றே அச்சமடைந்தனர். இந்த நிலையில், அவர் மாயமான 10 நாட்களுக்கு பிறகு, மார்ச் 19ம் திகதி மிக மோசமான காயங்களுடன் சாலையோரத்தில் இருந்து அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தற்போதும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளார். இந்த நிலையில் துபாய் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், தடைசெய்யப்பட்ட கட்டுமான தளத்தில் தனியாக நுழைந்து உயரத்திலிருந்து தவறி விழுந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என தெரிய வந்துள்ளது.
சாலையோரத்தில் எப்படி
உக்ரைன் நாட்டவர் மாயமானதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணை முன்னெடுத்ததாகவும், மிக மோசமான நிலையில் அவர் மீட்கப்பட்டு தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் துபாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துபாய் காவல்துறை அவரது குடும்பத்தினருடனும் தொடர்புடைய அதிகாரிகளுடனும் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.
ஆனால், உக்ரைன் மொடல் சாலையோரத்தில் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறித்து பொலிசார் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மார்ச் 9ம் திகதி விருந்துக்கு சென்ற Maria Kovalchuk அங்கே மொடல் துறையில் பணியாற்றுவதாக கூறும் இரு ஆண்களை சந்தித்ததாக நண்பர்களிடம் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மார்ச் 11ம் திகதி முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தில் அவர் பயணிக்கவில்லை என்ற நிலையில் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |