உக்ரைனில் இருந்து தப்பி சென்ற அந்நாட்டை சேர்ந்த அழகி! போட்ட அதிரடி சபதம்
உக்ரைனில் இருந்து தப்பி வெளியேறிய மொடல் அழகி உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளதோடு ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் சண்டையிடுவோம் என சபதம் போட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 14வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்கள் மற்றும் பல்வேறு பொருளாதார தடைகளையும் பொருட்ப்படுத்தாமல் புடின் அரசு அராஜக செயலில் ஈடுபடுகிறது.
இந்நிலையில் ரஷ்ய படையின் தாக்குதலில் இருந்து தப்பித்து, நாட்டை விட்டு வெளியேறிய உக்ரைன் நாட்டின் முன்னாள் அழகியான வெரோனிகா டிடுசென்கோ கூறியதாவது:உக்ரைன் மக்களுக்கு, தங்கள் நாட்டை பாதுகாக்கும் தைரியம் உள்ளது.
எனினும், ஆயுதங்கள் மட்டும் தேவைப்படுகிறது. எனவே, உக்ரைன் மக்களுக்கு ஆயுதங்கள் அளித்து உலக நாடுகள் உதவ வேண்டும்.
உக்ரைனின் சுதந்திரத்திற்காக, ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் சண்டையிடுவோம் என சூளுரைத்துள்ளார்.