உக்ரைன்-ரஷ்யா இடையே அதிகரிக்கும் பதற்றம்: உள்கட்டமைப்புகள் மீது பயங்கர தாக்குதல்
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கிட்டத்தட்ட 8 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஒப்புதலால் அதிகரித்துள்ள பதற்றம்
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கினார்.
இதற்கு ரஷ்யா கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன் உலக நாடுகளுக்கு எச்சரிக்கையையும் விடுத்தது.
‼️ BREAKING: The Russian Defense Ministry reported that the AFU struck a facility in the Bryansk region on Tuesday night with six U.S.-made ATACMS ballistic missiles.
— NEXTA (@nexta_tv) November 19, 2024
The Russian defense ministry said five missiles were shot down and one was damaged. Fragments of the downed… pic.twitter.com/DdRU1ofIWB
ரஷ்யாவின் எச்சரிக்கையையும் மீறி நேற்றிரவு அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்ய உள் நகரங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளின் உதவியுடன் ரஷ்யா பிராந்தியத்திற்குள் தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதங்களை பயன்படுத்தி பதிலடி கொடுப்பதற்கான ஒப்புதலை ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று வழங்கியுள்ளார்.
ரஷ்யாவின் இந்த புதிய கொள்கை மூன்றாம் உலக போரை தொடங்கும் ஆபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மீது தாக்குதல்
இந்நிலையில், ரஷ்யாவின் Bryansk பிராந்தியத்தின் மீது இரவோடு இரவாக உக்ரைன் நடத்திய தாக்குதலில் 8 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேதமானது அமெரிக்க வழங்கிய ATACMS ஏவுகணைகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் கராச்சேவ் உள்ள 1046வது தளவாட மையத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |