வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற விடாமல் பணயக்கைதிகளாக வைத்திருக்கிறது உக்ரைன்! ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைனின் கார்கிவ் நகரலில் சிக்கதவிக்கும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற உக்ரைன் படைகள் அனுமதிக்கவில்லை என ரஷ்ய குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், கார்கிவ் நகரிலிருந்து வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற உதவ ரஷ்யா தயாராக இருக்கிறது.
ஆனால், அவர்களை வெளியேற்ற விடாமல் உக்ரைன் படைகள் தடுக்கின்றன.
வெளிநாட்டினரையும் பொதுமக்களையும் பணயக்கைதிகளாக வைத்திருப்பதில் உக்ரேனிய அரசு தயங்கவில்லை என்று தோன்றுகிறது என்று லாவ்ரோவ் கூறினார்.
வெளிநாட்டு மாணவர்கள் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொதுமக்களை மீட்டு வெளியேற்ற 150 பேருந்துகளுடன் ரஷ்ய ராணுவம் தயாராக உள்ளது.
ஆனால், உக்ரைன் படைகள் பாதையை திறக்க மறுக்கின்றனர் என லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.