ஆயுத உதவிகள் மொத்தம் முடக்கிவிட்டு... உக்ரைன் தொடர்பில் ட்ரம்ப் கூறிய ஆருடம்
அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தாலும், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனால் வெற்ரிகொள்ள முடியாமல் போகலாம் என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய முடிவு
ரஷ்யாவின் முழு வீச்சிலான படையெடுப்பை எதிர்கொண்டுவரும் உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் முடக்கிவிட்டு, ரஷ்ய ஆதரவு நிலையை ட்ரம்ப் நிர்வாகம் தற்போது வெளிப்படையாக எடுத்துள்ளது.
ஐரோப்பா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்த சர்ச்சைக்குரிய முடிவு தொடர்பில் ட்ரம்பிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. மட்டுமின்றி, பேச்சுவார்த்தைக்கு என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ட்ரம்ப் நிர்வாகம், தங்கள் திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்த அவரை அவமானப்படுத்தி வெளியேற்றியது.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஆதரவின்றி உக்ரைனால் தப்பிக்க முடியாது என போலந்தின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பிலும் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் சமீப நாட்களில் அமெரிக்கா எடுத்துள்ள முடிவுகளின் விளைவுகள் குறித்தும் ட்ரம்பிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால் தடாலடியாக பதிலளித்துள்ள ட்ரம்ப், உக்ரைனால் வெற்றி பெற முடியாது என்றார்.
வெளிப்படையாகவே அதரித்து
ரஷ்யா நிர்வாகத்திடம் தங்களுக்கு நெருக்கம் இருப்பதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். பிப்ரவரி 28ம் திகதி வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கியுடனான கருத்து மோதலையடுத்து ட்ரம்ப் நிர்வாகம் உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை ரத்து செய்ததுடன், உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தையும் முடக்கியது.
அத்துடன் ஏவுகணைகளுக்கான குறியீடுகளையும் ஸ்தம்பிக்க செய்தது. அமெரிக்கா இதுவரை செலவிட்டுள்ள தொகைக்கு ஈடாக 500 பில்லியன் டொலர் மதிப்பிலான கனிம வள ஒப்பந்தம் வேண்டும் என ட்ரம்ப் அழுத்தமளித்து வருகிறார்.
ஆனால் போருக்கு காரணமான ரஷ்யாவை அவர் வெளிப்படையாகவே அதரித்தும் வருகிறார். இப்படியான ஒரு இக்கட்டான சூழலில், உக்ரைனின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |