கடவுள் நான் பேசுவதை கேட்கிறார்! காப்பாற்று... உக்ரைன் பெண்ணின் பரிதாப நிலையை காட்டும் புகைப்படங்கள்
உக்ரைனில் உள்ள தனது வீடு தரைமட்டமான கோபத்தில் ஆதங்கத்தை மூதாட்டி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
82 வயதான மரியா மயஷலபாக், உக்ரைனின் பக்முட் பகுதியில் தனது வீடு தரைமட்டமாகிவிட்டதால், வலியுடனும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்துடனும் வாழ்ந்து வருகிறார். வீடுகள் தரைமட்டமான இடத்தில் அங்குமிங்கும் அவர் செல்லும் பரிதாப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அவர் கூறுகையில், கடவுள் நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.. கடவுள் என்னை பார்த்துக் கொண்டுதானிருக்கிறார் கடவுளே என்னை இந்த துயரத்தில் இருந்து காப்பாற்று, காயமடையாமல் காப்பாற்று என்று காலையில் கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த மிகப் பயங்கர சத்தம் கேட்டது.
விஷப்பாம்பு வயிற்றில் அடித்து கொன்ற கிராம மக்கள்! இறப்பதற்கு முன் 50 குட்டிகளை ஈன்ற பாம்பு
அது என் தலை மீதே விழுந்ததைப் போல உணர்ந்தேன் என்கிறார் அந்த மூதாட்டி. ரஷிய படைகளின் குண்டு வீச்சில், ஒரு குண்டு அவரது வீட்டு சமையலறை மீது விழுந்ததைத்தான் அவர் இவ்வாறு நினைவுகூருகிறார்.
நான் கடவுளிடம் கேட்கிறேன். அவர்களுக்கு என்னதான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷ்யா அவர்களுக்குப் போதவில்லையா என்ன? ஏன் இப்படி மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்? என்றும் கூறினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.