வயதான உக்ரைன் தம்பதி கத்திய கத்தில் தெறித்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள்! வைரலாகும் வீடியோ
உக்ரைனில் துப்பாக்கிகளுடன் நுழைந்து அச்சுறுத்திய ரஷ்ய வீரர்களை வயதான தம்பதியினர் தைரியமாக மிரட்டி வெளியே அனுப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
வீடியோவில், ரஷ்ய வீரர்கள் நான்கு பேர் பூட்டியிருந்த பண்ணை வீட்டுக்குள் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்தனர். அவர் உணவுப்பொருட்களைத் தேடி அங்கே நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த வயதான தம்பதியினர் ரஷ்ய வீரர்களை வெளியே செல்லுமாறு திட்டினர்.
அப்போது அவர்களை பயமுறுத்தும் வகையில், ரஷ்ய வீரர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டார். அதற்கு மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வயதான பெண், சற்றும் பயப்படாமல் அவர்களை உடனடியாக வெளியே செல்லுமாறு மிரட்டினார்.
அவர் கத்திய கத்தில் மிரண்டுபோன ரஷ்யர்கள் சில நொடிகளில் வெளியே சென்றனர். சிசிடிவி கமெராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Wojsko rosyjskie włamało się na prywatną posesję (prawdopodobnie w poszukiwaniu prowiantu), ale uzbrojeni żołnierze zostali wygonieni przez właścicieli- starsze małżeństwo. pic.twitter.com/ejowz761da
— BuckarooBanzai (@Buckarobanza) March 8, 2022
இதற்கு ஏராளமான நெட்டிசன்கள் தம்பதியினரின் வீரமான செயலுக்கு பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதேசமயம், ஒரு சிலர், அங்கு வந்த விரைகள் ரஷ்யர்களா தானா, கை கால்கள் வெள்ளை நிற பேண்ட் அணிந்திருக்கினர். ரஷ்யர்கள் சிவப்பு நிற பேண்டுகளை பயன்படுத்துகின்றனர், அவர்கள் உக்ரைனிய வீரர்களாக இருக்குமோ என குழப்பமாக இருப்பதாக கமெண்டு செய்து வருகின்றனர்.