புடின் - ட்ரம்ப் சந்திப்பிற்கு முன்பாக ரஷ்யாவின் அழுத்தம்: உக்ரைனின் அதிரடி உத்தரவு
ரஷ்ய இராணுவம் அழுத்தத்தை அதிகரித்து முன்னேறும் சூழலில் உக்ரைன் வெளியேற்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆகியோரது சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ரஷ்ய இராணுவம் சமீபத்தில் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்தி அழுத்தத்தை அதிகரித்தது.
முன்னதாக, ரஷ்யப் படைகள் Iskra கிராமத்தையும், உக்ரைனின் Shcherbynivka என்ற சிறிய நகரத்தையும் கைப்பற்றியதாக கூறியது.
இதன் காரணமாக தற்போது உக்ரைன் ரஷ்ய இராணுவத்திற்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் இருந்து, கிழக்கில் மேலும் வெளியேற்றங்களை உத்தரவிட்டுள்ளது.
வெளியேற்ற உத்தரவு
அதாவது, Druzhkivka நகரம் மற்றும் அதன் அருகில் உள்ள மேலும் நான்கு கிராமங்களையும் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து Donetsk பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் Vadym Filashkin கூறுகையில், "Druzhkivka நகரத்தில் இருந்து குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களை கட்டாயமாக வெளியேற்றத் தொடங்கினோம். 1,879 குழந்தைகள் குடியிருப்புகளில் எஞ்சியிருக்கின்றனர்" என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் ரஷ்யர்கள் முன்னேறி வரும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் இல்லாத மற்றொரு நகரமான Bilozerskeயில் இருந்து வெளியேற்ற புதன்கிழமை உக்ரைன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |