ட்ரம்பின் அழுத்தம் ஒருபக்கம்... அதிமுக்கிய முடிவெடுத்த உக்ரைன் நாடாளுமன்றம்
எதிர்வரும் ஆகஸ்டு மாதம் வரையில் உக்ரைன் நாடாளுமன்றம் இராணுவச் சட்டத்தை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவும் அமெரிக்காவும்
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளின் ஒருபகுதியாக தேர்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் என ரஷ்யாவும் அமெரிக்காவும் அழுத்தமளிக்கும் நிலையில், இராணுவச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா உடனான போர் உக்கிரமாக நடந்துவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 357 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் போர்க்களத்தில் இராணுவத்தினரை திரட்டுவதும் தேர்தலுக்கான நடைமுறைகளை ஒத்திவைப்பதும் சாத்தியமாகும்.
ரஷ்யா முன்னெடுக்கும் போருக்கு நடுவே தேர்தலை முன்னெடுக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் கடும் அழுத்தமளிக்கப்பட்டு வந்துள்ளது. தேர்தல் நடத்த முடியாது என்ற காரணத்தை விளக்கிய உக்ரைன் ஜனாதிபதியை சர்வாதிகாரி என ட்ரம்ப் சாடினார்.
அமுலில் இருக்கும்
ஆனால் வெள்ளை மாளிகையில் நடந்த நெருக்கடியான சூழலுக்கு பிறகு, உக்ரைனில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மக்கள் ஆதரவு அதிகரித்தது. 2024 இல் ஜெலென்ஸ்கியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பலமுறை அவரது சட்டபூர்வமான தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
ஆனால் நாட்டில் இராணுவச் சட்டம் அமுலில் இருக்கும் போது தேர்தல் நடத்த சட்டத்தில் இடம் இல்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை முழுமையான போர் நிறுத்தத்தைக் கொண்டுவரும் என்றே நம்பப்படுகிறது. இருப்பினும், சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |